இளம் பெண்களை குறிவைக்கும் காண்டம் நிறுவனங்கள்..!
காண்டம் என்பது பாதுகாப்பு கருவி என்பதைத் தாண்டி தற்போது கார்ப்ரேட் நிறுவனங்கள் இதை உல்லாச கருவியாக விளம்பரப்படுத்தத் துவங்கியுள்ளனர்.
இளம் தலைமுறையினரை டார்கெட் செய்தும், குறிப்பாகப் பெண்களுக்குப் பிடிக்கும் வகையில் பொருட்கள் தயாரிக்கப்பட்டும் விளம்பரப்படுத்தப்பட்டும் வருகிறது.
இனிப்பு சுவை மற்றும் இருட்டில் மின்னும் வகைகள் காண்டம் விற்பனை கடந்த 2023 ஆம் ஆண்டில் இரட்டிப்பாக வளர்ச்சி அடைந்துள்ளது.
IQVIA நுகர்வோர் சுகாதார சில்லறை தணிக்கை தரவுகளின்படி, ரூ.1,755 கோடி மதிப்பிலான காண்டம் விற்பனை பிரிவு கடந்த ஆண்டு 13 சதவீத மதிப்பு வளர்ச்சியைக் கண்டுள்ளது.
இது 2022 ஆண்டின் 7 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடும் போது பெரிய அளவிலான உயர்வு. புதுமையான வடிவமைப்புகள் இளம் தலைமுறை வாடிக்கையாளர்களை ஈர்க்கின்றன
இந்தியாவில் ரெக்கிட் நிறுவனத்தின் டியூரெக்ஸ் காண்டம் பிராண்ட் சுமார் 14.9 சதவீத சந்தை பங்கைக் கொண்டுள்ளது.
குடும்பக் கட்டுப்பாடு பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், காண்டம் முதன்மையாகக் கருத்தடை மற்றும் பாலியல் ரீதியாகப் பரவும் நோய்த்தொற்றுகளை (STIs) தடுப்பதற்காக அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.