உடல் பருமனை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், உணவை கட்டுப்படுத்த வில்லை என்றால் உடல் எடை கூடும்.
போதிய அளவு புரத உணவு எடுத்துக் கொள்ளவில்லை என்றால், எடை இழப்பு சாத்தியமில்லை.
சிலர் எடையை குறைக்க பட்டினி கிடப்பார்கள். இதனால் மெட்டபாலிசம் பாதிப்பதோடு, உண்மையில் அதிகம் சாப்பிடும் நிலை தான் ஏற்படும்.
போதிய அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால், மெட்டபாலிஸம் பாதிக்கப்படும். இதனால் செரிமானம் மந்தமாகி உடல் எடை கூடும்.
போதிய தூக்கம் இல்லை என்றால், நமது ஹார்மோன்கள் அளவு பாதித்து, உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும்.
மது பானம் அதிக அளவில் குடிப்பதால், உடல் பருமன் கூடும். எடை இழப்பு முயற்சிகள் பலனளிக்காது.
தீவிர டயட், தீவிர உடற்பயிற்சி எதுவும் தேவையில்லை. ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடித்தாலே, உடல் எடையை ஆரோக்கியமாக இழக்கலாம்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.