டீ குடிக்காமல் ஒரு சிலரால் இருக்க முடியாது. ஆனால் அதிகமாக டீ குடிப்பதால் என்ன பிரச்சனைகள் ஏற்படும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
டீயில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை சேர்ப்பது நல்லது இல்லை. முடிந்தவரை சர்க்கரை அளவை குறைக்கவும்.
டீயுடன் பிஸ்கட் அல்லது பஜ்ஜி சாப்பிடுவது உடலுக்கு நல்லது இல்லை. இதனை தவிர்ப்பது நல்லது.
நாள் ஒன்றுக்கு 2 கப்க்கு மேல் டீ குடிப்பது உடலுக்கு நல்லது இல்லை. எனவே அதற்கு மேல் குடிக்க வேண்டாம்.
சாப்பிட்டவுடன் டீ குடிப்பதை தவிர்ப்பது நல்லது. 40 நிமிடங்கள் அல்லது 1 மணிநேரம் கழித்து டீ குடிக்கவும்.
உங்களுக்கு இரவில் தூக்கம் அல்லது அஜீரணம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் இரவு டீ குடிப்பதை தவிர்க்கவும்.
காலையில் வெறும் வயிற்றில் டீ குடிப்பதை முடிந்தவரை தவிர்க்கவும், ஏனெனில் இது வயிற்றில் அமிலத்தன்மையை ஏற்படுத்தும்.
உடலில் அமில அளவைக் குறைக்க டீ அல்லது காபி குடிக்கும் 30 நிமிடங்களுக்கு முன்பு ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது நல்லது.