பாதாம் மற்றும் வால்நட்ஸ் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. இவற்றில் அமினோ அமிலங்கள் உள்ளதால் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவும்.
கெமோமில் டீயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நல்ல நிம்மதியான தூக்கத்தை கொண்டு வர உதவும்.
பூசணி விதைகளில் மெக்னீசியம் நிறைந்துள்ளது, இவை தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவும்.
கிவியில் உள்ள செரோடோனின் மெலடோன் உற்பத்திக்கு உதவுகிறது, இது நல்ல தூக்கத்தின் தரும் ஹார்மோன் ஆகும்.
தயிரில் வைட்டமின் பி12, கால்சியம் மற்றும் புரதம் நிறைந்த உணவாகும், இவை தூக்கத்தை மேம்படுத்த உதவும்.
காளான் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த சத்தான உணவாகும். இவை நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் இருதய செயல்பாடுகளை அதிகரிக்க உதவும். மேலும் தூக்கம் வர உதவும்.
ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த ப்ரோக்கோலி, REM தூக்கத்தை மேம்படுத்துகிறது, இதன் விளைவாக தூக்கத்தின் தரம் மேம்படும்.