இரவு நேரத்தில் உலர் பழங்களை சாப்பிடுவது உங்கள் தூக்கத்திற்கு நல்லதல்ல. இவற்றில் அதிக நார்ச்சத்து உள்ளதால் செரிமான ஆரோக்கியத்தை பாதிக்க கூடும்.
சாக்லேட் இரவில் சாப்பிட்டால் அது உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கலாம். சாக்லேட்டுகளில் சர்க்கரை, கலோரிகள் காஃபின் உள்ளதால், இதை இரவில் சாப்பிட்டால் உங்கள் ஆரோக்கியம் பாதிப்படையலாம். காஃபினை இரவில் எடுத்து கொள்வது தூக்கத்தை கெடுக்கும் என்பதால் சாக்லேட்டை தவிர்ப்பது நல்லது.
அதிக சர்க்கரை தூக்கத்தை கெடுக்கலாம், சிறந்த இரவு தூக்கத்திற்கு குறைந்த சர்க்கரை, நார்ச்சத்து நிறைந்த தானியங்களை சாப்பிடவும்.
காபி தூக்கத்தை கெடுக்கின்றன. காஃபின் அடங்கிய பானங்களை பருகுவதால் ஒருவர் சுமார் ஐந்து முதல் ஆறு மணி நேரம் வரை விழித்திருக்க முடியும் என்று கூறப்படுகிறது.
வெள்ளரிகள் கக்கூர்பிட்டாசின் எனப்படும் ஒரு தனிமம் (Element) நிரம்பியுள்ளது. இது செரிமான சிக்கல்களை ஏற்படுத்தி நல்ல இரவு தூக்கத்தில் குறுக்கிட்டு நிம்தியான தூக்கத்தை கெடுக்கிறது.
சிட்ரஸ் பழங்கள் மற்றும் தக்காளி அமில ரிஃப்ளக்ஸ், தூக்கத்தை தொந்தரவு செய்யும்.
பொறித்த உணவுகள், வறுத்த உணவுகள், பர்கர் போன்றவற்றை இரவு தூங்கும் முன்பாக சாப்பிடக் கூடாது.