தொப்பை கொழுப்பை கரைப்பதில் சிறப்பான பலன்களை தரும் சில யோகாசனங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
நௌகாசனம் என்பது படகு போன்று உடலை வளைத்து செய்யும் யோகாசனம். இந்த ஆசனமும் வயிற்று தசைகளை இறுக்கமாக்குகிறது.
வில் வடிவிலான தோற்றத்தை கொடுக்கும் தனுராசனம், வயிற்று தசைகளை இறுக்குவதற்கான மிகச் சிறந்த ஆசனம்.
கும்பகாசனம் பலகை போஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்வதன் மூலம் உடல் எடை குறையும், முதுகு வலி குறையும்,
நாகப் பாம்பை போல் உடலை வளைத்து செய்யும் புஜங்காசனம் வயிற்றை சுற்றியுள்ள கொழுப்பை கரைக்கும் சிறந்த ஆசனம்.
ஒட்டக போஸ் கொண்ட உஸ்ட்ராசனம் வயிற்று தசைகளை இறுகு செய்து தொப்பை கொழுப்பை கரைக்கிறது.
பத்த கோனாசனம் என்பது பட்டாம்பூச்சி போல் கால்களை பரப்பி செய்யும் யோகாசனம் ஆகும். இந்த ஆசனம் ஜீரண உறுப்புகளை வலுப்படுத்துகிறது.
இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் எந்த மருந்துக்கும் அல்லது சிகிச்சைக்கும் மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.