வைட்டமின் சி, வைட்டமின் பி 6, பொட்டாசியம், நார்ச்சத்து என உடலுக்கு தேவையான சக்தியை அளிக்கும் ஊட்டச்சத்துக்களையும் கொண்டது வாழைப்பழம்
ஆரோக்கியத்தின் சுரங்கமாக இருக்கும் வாழைப்பழம் உடலுக்கு கொடுக்கும் ஊட்டச்சத்துக்களுக்கு ஒரேயொரு உதாரணம் போதும்.
விரதம் இருப்பவர்கள், வெறும் வாழைப்பழத்தை மட்டுமே சாப்பிட்டு விட்டு, நாள் முழுக்க பட்டினி இருந்தாலும் அவர்களுக்கு பசி ஏற்படுவதில்லை, சோர்வோ பலவீனமோ ஏற்படுவதில்லை
வாழைப்பழத்தை எப்போது சாப்பிட்டாலும் நல்லது என்றாலும் இரவில் உறங்குவதற்கு முன் உண்பதால் என்ன நன்மைகள் என்பதைத் தெரிந்துக் கொள்வோம்
இரவில் வாழைப்பழம் சாப்பிட்டுவிட்டு படுத்தால், காலையில் எழுந்ததும், மலம் சிக்கல் இல்லாமல் இயல்பாக கழிந்து காலைக்கடன் பிரச்சனை இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கலாம்
தூக்கத்தைத் தூண்டும் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலமாகும். இது வாழையில் போதுமான அளவு இருப்பதால், இரவு நேரத்தில் வாழைப்பழத்தை சாப்பிடுவது நல்லது
வாழைப்பழத்தில் உள்ள மெக்னீசியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் தசைகள், நரம்புகளை தளர்வடையச் செய்து, பதற்றத்தை தணித்து ஆழ்ந்த உறக்கத்தைக் கொடுக்கின்றன
வாழைப்பழத்தில் உள்ள இயற்கை சர்க்கரைகள் இரவில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் என சுகாதார நிபுணர்கள் நம்புகின்றனர்
இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்ட இந்த கட்டுரையை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை