என்ன செஞ்சாலும் வெயிட் குறையலையா... இந்த தவறுகள் காரணமாக இருக்கலாம்..!

Vidya Gopalakrishnan
Feb 20,2024
';

டயட்

உடல் பருமனை குறைக்க வேண்டும் என்ற பேரார்வத்தில், சிலர் கடுமையான டயட் முறையை பின்பற்றுகின்றனர். இது மெட்டபாலிசத்தை பாதித்து உடல் எடையை கூட்டும்.

';

பட்டினி

சிலர் எடையை குறைக்க உணவு உண்ணாமல், பட்டினி கிடப்பார்கள். இதனால் மெட்டபாலிசம் பாதிப்பதோடு, நாம் உண்மையில் அதிகம் சாப்பிடும் நிலைக்கு தள்ளப்படுவோம்.

';

சப்ளிமென்ட் மாத்திரை

சிலர் பருமனை குறைக்க சப்ளிமென்ட் மாத்திரைகளை எடுத்துக் கொள்வார்கள். இதன் பக்க விளைவாக சிலருக்கு உடல் எடை அதிகரிக்கலாம்.

';

அதீத உடற்பயிற்சி

அளவிற்கு அதிரமான உடற்பயிற்சியின் காரணமாக, கார்டிசோல் ஹார்மோன் அளவு அதிகரித்து, தசைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இது உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.

';

தூக்கமின்மை

போதிய ஆழ்ந்த தூக்கம் இல்லை என்றால், அது நமது ஹார்மோன்கள் அளவை பாதித்து, உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும்.

';

எதிர்பார்ப்பு

சிலருக்கு உடனே எடை குறைய வேண்டும் என்று எதிர்பார்ப்பு இருக்கும். இது நீண்ட நாள் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

';

வாழ்க்கை முறை

தீவிர டயட், தீவிர உடற்பயிற்சி இல்லாமல், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடித்தாலே, உடல் எடையை ஆரோக்கியமாக இழக்கலாம்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story