வெள்ளிரிக்காயை துண்டு துண்டாக வெட்டி, கண்களை மூடி, அதன்மீது 10-15 நிமிடங்கள் வைக்க வேண்டும்.
தக்காளியையும் வெள்ளரிக்காயை போல் வெட்டி 10-15 நிமிடங்களில் வைக்க வேண்டும். இதுவும் கருவளையத்தை போக்குவதில் சிறந்த பங்களிப்பை அளிக்கும்.
சூடு தணிந்துபோன, டீ பேக்குகளை கண்களை மூடி 10-15 நிமிடங்களில் வைக்கவும். இதில் இருக்கும், காஃப்பின் மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட கருவளையங்களை நீக்கும்.
உருளை கிழங்கை நன்றாக தட்டி, அதன் சாறை வெளியில் எடுத்து, அதில் பஞ்சை நணைத்து கண்ணுகளுக்கு அடியில் தேய்க்கவும்.
பஞ்சை குளிர்ந்த பாலில் நணைத்து, உங்கள் கண்ணுகளுக்கு அடியில் தேய்க்கவும். அதை 10-15 நிமிடங்கள் வரை காயவிடாமல் பார்த்துக்கொள்ளவும். அதில், லாக்டிக் ஆசிட் தோலுக்கு பொலிவை தரும்.
கற்றாழை பசையை எடுத்து, கண்ணுகளுக்கு அடியில் 10-15 நிமிடங்கள் காயாமல் வைத்துக்கொண்டால் கருவளையம் நீங்கும்.
எலுமிச்சை சாற்றையும், தண்ணீரையும் சமமாக கலந்து, அதை பஞ்சில் நணைத்து கண்களில் தேய்த்துக்கொள்ளவும். அதை 10-15 நிமிடங்களில் கண்களில் வைத்து தேய்க்கவும். இதில் உள்ள விட்டமிண் சி உங்களின் கண்ணுக்கு பொலிவை தரும்.