பழங்கள் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை. ஆரோக்கியமான மனிதனுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் பழங்களில் உள்ளன.
பலருக்கு மாலை அல்லது இரவு உணவிற்கு பிறகு பழங்களை சாப்பிடும் வழக்கம் உள்ளது. இந்த நேரத்தில் பழங்களை சாப்பிடுவது நன்மைகளுக்கு பதிலாக உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
பழங்களை எப்போதும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். அதனால் அது எளிதில் ஜீரணமாகும். பழங்களை சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் வேறு ஏதேனும் உணவை எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும்.
உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன் அல்லது உணவை சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பழங்களை உட்கொள்ளுங்கள், இல்லையெனில் செரிமானம், அமிலத்தன்மை போன்ற பல பிரச்சனைகள் ஏற்படலாம்.
காலையில் பழங்களை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கும் உடலுக்கும் மிகவும் நன்மை பயக்கும். ஆனால் காலையில் வெறும் வயிற்றில் சில பழங்களை சாப்பிடக் கூடாது.
சிட்ரிக் அமிலம் அதாவது சிட்ரஸ் பழங்களை வெறும் வயிற்றில் உட்கொள்வது அமிலத்தன்மையை அதிகரிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இரவில் உடலின் வளர்சிதை மாற்றம், அதாவது மெடாபாலிஸம் குறைவதால் பழங்களை இரவில் சாப்பிடக்கூடாது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். இருப்பினும் இரவு நேரத்தில் ஆப்பிளை சாப்பிட்டால் வாய்வுப் பிரச்சனையை உண்டாக்கி விடும்.
தர்பூசணி மற்றும் நீர்ச்சத்து நிறைந்திருக்கும் பழங்களை இரவு நேரத்தில் சாப்பிட்டால், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். இதன் காரணமாக தூக்கமின்மை பிரச்சனை ஏற்பட வாய்ப்புண்டு.
உங்களுக்கு குளிர்ச்சியான உடல் வாகு இருந்தால், வாழைப்பழங்கள், ஆரஞ்சு, அன்னாசிப்பழங்கள் போன்ற பழங்களை அதிகம் சாப்பிட வேண்டாம்.
உங்களுக்கு சூடான உடல் வாகாக இருந்தால், மாம்பழம் மற்றும் பப்பாளி போன்ற பழங்கள் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்கவும்.