எலும்புகள் நம் உடலில் கட்டமைப்பிற்கும் உறுதிக்கும் மிக அவசியமாகும்.
வைட்டமின் டி குறைபாடு இருந்தால் எலும்புகள் வலு இழக்கின்றன. வைட்டமின் டி தேவையை பூர்த்தி செய்யும் சில உணவுகளை இந்த பதிவில் காணலாம்.
பசும்பால் குடிப்பது எலும்பின் வலிமைக்கு மிகவும் நல்லது. இதில் ஏராளமான கால்சியம் மற்றும் வைட்டமின் டி உள்ளது. இது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது.
முட்டை சாப்பிடுவது எலும்புகளுக்கு மிகவும் நல்லது. எலும்பு முறிவுக்குப் பிறகு முட்டைகளை சாப்பிட மருத்துவர்கள் அடிக்கடி பரிந்துரைக்கின்றனர். முட்டையின் மஞ்சள் கரு சாப்பிடுவது எலும்புகளுக்கு மிகவும் நன்மை பயக்கும்.
பல சத்துக்கள் உள்ள காளானை சாப்பிடுவதால் வைட்டமின் டி குறைபாட்டை போக்கலாம். இதனை உணவில் சேர்த்துக் கொண்டால், எலும்புகளை வலுவாக்கலாம்.
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் டி உள்ளது. ஆரஞ்சு பழச்சாறு எடுத்து குடிப்பதன் மூலம் வைட்டமின் டி குறைபாட்டை போக்கலாம்.
எலும்பு வலிமைக்கு மீன் சாப்பிடுவது நல்லது. உணவில் டுனா, கானாங்கெளுத்தி மற்றும் சால்மன் மீன்களை சேர்த்துக் கொள்வது எலும்புகளை வலுவாக்கும்.