கூகுள் Pay, phone Pay-ல் தவறாக பணம் அனுப்பிட்டீங்களா? கவலை வேண்டாம்
யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) அறிமுகம் மூலம் இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் புரட்சி ஏற்பட்டுள்ளது.
மக்களுக்கு வசதியாக இருக்கும் இதில் சில நடைமுறை சிக்கல்களும் இருக்கின்றன. சில சமயங்களில் தவறான யுபிஐ பரிவர்த்தனை செய்யப்படுகிறது.
அந்தசூழலில் பரிவர்த்தனை பணத்தை திரும்ப பெறுவது என்பது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் சவாலாக இருக்கிறது.
இதற்காக NPCI ஆனது UPI ஆட்டோ-ரிவர்சல்" முறையை செயல்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட சூழ்நிலைகளில், UPI பரிவர்த்தனையைத் திரும்பப் பெற நீங்கள் கோரலாம்.
முதலில், தவறான UPI ஐடி அல்லது மொபைல் எண்ணுக்கு நீங்கள் தவறுதலாகப் பணத்தை அனுப்பினால், அவர்களை அழைத்து பணத்தை திரும்ப கேட்கலாம்.
இரண்டாவதாக, நீங்கள் உடனடியாக உங்கள் வங்கி அல்லது உங்களின் UPI சேவை வழங்குநரிடம் புகாரளிப்பது முக்கியம்.
இறுதியாக, நிலுவையில் உள்ள அல்லது தோல்வியுற்ற UPI பரிவர்த்தனையை மட்டுமே உங்களால் மாற்றியமைக்க முடியும். வெற்றிகரமான பரிவர்த்தனைகளை மாற்ற முடியாது.
ஒருமுறை பரிவர்த்தனை வெற்றிகரமாக முடிந்துவிட்டால், அதை தவிர்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, UPI பரிவர்த்தனை செய்வதற்கு முன், எந்தப் பிழையும் ஏற்படாமல் இருக்க, விவரங்களை இருமுறை சரிபார்ப்பது முக்கியம்.
யுபிஐ பரிவர்த்தனையை எப்போது செய்யும்போது விழிப்புடன் இருக்க வேண்டும். பெறுநரின் விவரங்களை இருமுறை சரிபார்க்கவும்.
இறுதியாக, நிலுவையில் உள்ள அல்லது தோல்வியுற்ற UPI பரிவர்த்தனையை மட்டுமே உங்களால் மாற்றியமைக்க முடியும். வெற்றிகரமான பரிவர்த்தனைகளை மாற்ற முடியாது.
இது குறித்தும் வங்கியில் அல்லது யுபிஐ சேவை வழங்குநரிடத்தில் புகார் அளிக்க முடியும். அதற்கு குறிப்பிட்ட காலத்தை அவர்கள் எடுத்துக் கொள்வார்கள்