பிவிசி ஆதார் அட்டை உங்களுக்கு வேண்டுமா? ஆன்லைனில் புக் செய்யலாம்
myaadhaar.uidai.gov.in/genricPVC என்ற UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்குச் செல்லவும்.
லாகின்செய்து மை ஆதார் (My Aadhaar) என்ற டேப்-ஐ கிளிக் செய்யவும். ஆர்டர் ஆதார் பிவிசி கார்டு (Order Aadhaar PVC Card) என்ற விருப்பத்தின் கீழ் உள்ள விருப்பத்தை பார்க்கவும்.
அதன் கீழ் காணப்படும், ஆர்டர் நவ் (Order Now) என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் ஆதார் எண் (Aadhaar number) மற்றும் கேப்ட்சாவை (Captcha code) ஐ உள்ளிடவும்.
கன்டினியூ (Continue) என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் முகவரி (Address) மற்றும் மொபைல் எண்ணை (Mobile number) உள்ளிடுமாறு கேட்கப்படுவீர்கள். "சப்மிட் (Submit)" என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். OTP ஐ உள்ளிட்டு "வெரிஃபை (Verify)" என்பதைக் கிளிக் செய்யவும்.
இதற்கு நீங்கள் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். "பே நவ் (Pay Now)" என்பதைக் கிளிக் செய்யவும். உறுதிப்படுத்தல் செய்தியைப் பெறுவீர்கள்.
உங்கள் PVC ஆதார் அட்டை உங்கள் முகவரிக்கு 15 வேலை நாட்களுக்குள் டெலிவரி செய்யப்படும்.
பிளாஸ்டிக் பிவிசி ஆதார் அட்டையை வாங்க பொதுமக்கள் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும்.