தொப்பை கொழுப்பை கரைத்து உடல் பருமனை குறைக்க இரவில் குடிக்க வேண்டிய சில இயற்கையான பானங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
இரவில் தூங்கும் முன் இலவங்கப்பட்டை நீர் குடிப்பதால், தொப்பை கொழுப்பு கரைந்து, உடல் எடையை வேகமாக குறைக்க உதவி கிடைக்கின்றது. இது நீரிழிவு நோயாளிகளுக்கும் மிக நல்லது.
இரவு தூங்கும் முன் ஒரு கப் க்ரீன் டீ குடிப்பது வேகமாக உடல் எடையை குறைக்க உதவும். கிரீன் டீயில் எபிகல்லோகேடசின் கேலேட் கலவை உள்ளது, இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.
இரவில் தூங்கும் முன் இஞ்சி தண்ணீரில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது உடல் எடையைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இஞ்சியில் தெர்மோஜெனிக் பண்புகள் உள்ளன, இவை வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகின்றன.
இரவு உணவு சாப்பிட்டு தூங்கும் முன் ஓம நீர் குடிக்கலாம். ஓமம் செரிமானத்தை சீராக்கி, வாயுத்தொல்லையை நீக்கி தொப்பை கொழுப்பை (Belly Fat) கரைக்க ஊதவுகிறது.
இரவில் தூங்கும் முன் வெதுவெதுப்பான நீரில் மஞ்சளை கலந்து குடித்தால், எடையை எளிதாக குறைக்கலாம். மஞ்சளில் குர்குமின் கலவை உள்ளது, இது கொழுப்பு திசுக்களின் வளர்ச்சியை அடக்கி உடல் எடையை கட்டுக்குள் வைக்கிறது.
இவை தவிர ஆரோக்கியமான உணவுமுறை, வாழ்க்கை முறை மற்றும் உடற்பயிற்சிகளும் உடல் எடையை குறைக்க மிக அவசியமாகும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.