கொழுப்பு கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் குடிக்க வேண்டிய சாறுகள் பற்றி இங்கே காணலாம்.
பீட்ரூட் சாறு உடலில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்களின் அளவை அதிகரிக்கிறது. இது கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது. இதனை வெறும் வயிற்றில் குடிப்பதால் கொழுப்பு கல்லீரல் நோய் குணமாகும், கல்லீரல் பலமாகும்.
எலுமிச்சை மற்றும் இஞ்சி கலவை கொழுப்பு கல்லீரலுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. எலுமிச்சையில் வைட்டமின் சி, அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளன. இவை கல்லீரலில் உள்ள நச்சுகளை நீக்க உதவும்.
மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டி-ஆக்சிடெண்ட் பண்புகள் நிறைந்துள்ளன. மஞ்சள் நீர் கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி கொழுப்பை குறைக்க உதவுகிறது.
கேரட் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிய அளவில் உதவுகின்றது. வெறும் வயிற்றில் கேரட் சாறு குடிப்பது கொழுப்பு கல்லீரலை குணப்படுத்த உதவுகிறது.
வீட்கிராஸ் சாறு கல்லீரலில் உள்ள நச்சுகளை நீக்குகிறது. கொழுப்பு கல்லீரல் நோயாளிகள் இதை வெறும் வயிற்றில் குடிப்பது அதிக அளவில் நன்மை பயக்கும்.
இந்த சாறுகளுடன் கண்டிப்பாக மருத்துவர்கள் அளிக்கும் மருந்துகளை உட்கொண்டு அவர்களது ஆலோசனையை பின்பற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.