நம் உடலில் யூரிக் அமில அளவு அதிகரித்து, அது வெளிவர முடியாமல் போனால், மூட்டுவலி, சிறுநீரக கற்கள் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.
யூரிக் அமில அளவை உடனடியாக கட்டுப்படுத்தும் சில இயற்கையான எளிய வழிகளை பற்றி இங்கே காணலாம்
வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை யூரிக் அமிலத்தை குறைக்க உதவுகிறது, சிறுநீரக கற்கள் மற்றும் கீல்வாதத்தை போக்க உதவுகிறது.
யூரிக் அமில அளவை குறைக்க பெரிதும் உதவும் காயான ப்ரோக்கோலி மலச்சிக்கல் மற்றும் எடை இழப்புக்கும் உதவும்.
கிவியில் 62 சதவீதம் அப்ஸ்கார்பிக் அமிலம் உள்ளது. இது யூரிக் அமில அளவை கட்டுப்படுத்தவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும்.
கடுகு கீரையில் புரதம், வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இது யூரிக் அமில பிரச்சனையை நீக்குவதில் நன்மை பயக்கும்.
கொய்யாவில் அதிக வைட்டமின் சி உள்ளது. இது இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு மற்றும் அதிக யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.