உண்ணும் உணவு செரிமானம் ஆனால் தான் உடல் இயல்பாக இருக்கும். சில சமயங்களில் அளவுக்கு அதிகமான உணவை சாப்பிட்டு விட்டு திண்டாடுவோம்
உணவுக்கு பிறகு வெல்லம் சேர்த்த இனிப்பு உண்பது செரிமானத்தை மேம்படுத்தும் என்று ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது.
உணவே மருந்து என்று சொல்லும் ஆயுர்வேதம், செரிமானம் சீராக வெல்லத்துடன் நெய் சேர்த்து உண்பதை பரிந்துரைக்கிறது.
விருந்துகள், பண்டிகைக்காலம் என பல நேரங்களில் விரும்பியும் விரும்பாமலும் உணவை அதிக அளவில் சாப்பிட்டுவிடுகிறோம். ஆனால், அது அஜீரணத்திற்கு வழி வகுக்கிறது.
வெல்லம் இரும்புச்சத்து உட்பட பல ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. சுத்தீகரிக்கப்பட்ட சர்க்கரையை உண்பது ஆரோக்கியத்தை கெடுக்கும் என்றால், வெல்லத்தை உண்டால் ஆரோக்கியம் அதிகரிக்கும்
ஆயுர்வேதம் மட்டுமல்ல, அனைத்து மருத்துவங்களும் சுத்தமான நெய் உண்பதை பரிந்துரைக்கின்றன.
செரிமான பிரச்சனைகள் ஏற்பட்டால், நெய்யுடன் வெல்லத்தை நன்றாக குழைத்து உண்பது நல்ல மருந்தாக மாறி, செரிமானத்தை ஊக்கப்படுத்தும்.