யூரிக் அமிலம் உடல் பியூரின்கள் என்னும் இரசாயனங்களை உடைக்கும் போது உருவாகும் ஒரு கழிவுப் பொருளாகும். இதன் அளவு அதிகரித்தால் பல பிரச்சனைகள் ஏற்படும்.
யூரிக் அமில அளவை கட்டுப்படுத்த இயற்கையான வழிகளை பின்பற்றுவது நல்லது.
சில ஆரோக்கியமான மாவுகளால் ஆன ரொட்டிகளை உட்கொண்டால் யூரிக் அமிலத்தை இயற்கையான வழிகளில் கட்டுப்படுத்தலாம்.
சோள மாவில் செய்யும் ரொட்டியை உட்கொண்டால் உடலில் சேர்ந்திருக்கும் அழுக்கும், நச்சுகளும் வெளியேறிவிடும்.
இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள ராகி ரொட்டியை உட்கொண்டால் உடலில் யூரிக் அமில அளவை கட்டுப்படுத்தலாம். குறிப்பாக இது குளிர் காலத்தில் உஷ்னம் அளிக்கும்.
ஓட்ஸ் ரொட்டி சாப்பிடுவதால் யூரிக் அமிலம் கட்டுப்படுவதோடு இரத்த சர்க்கரை அளவும் கட்டுப்பட்ம்.
குளிர் காலத்தில் கம்பு ரொட்டியை உட்கொள்வதால் இரத்தத்தில் யூரிக் அமில அளவு கட்டுப்படும், சர்க்கரை அளவு கட்டுப்படும், உடல் எடையும் குறையும். நச்சுகள் நீங்கும்.
வரகு ஒரு குறைந்த ப்யூரின் தானியமாகும். ஆண்டிஆக்சிடெண்டுகள் அதிகம் உள்ள இது உப்பசத்தை குறைக்கிறது.