கொத்தமல்லியில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. இதனால், குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய பருவகால பாதிப்புகளை தடுத்திட முடியும்.
கொத்தமல்லி இலைகளில் இயற்கையாகவே அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், சுவாச பிரச்சனைகளை எதிர்த்து போராட பெரிதும் உதவுகிறது. சளி, இருமல் போன்ற தொற்று பாதிப்புக்கு பயனுள்ள தீர்வாக இருக்கும்
கொத்தமல்லியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், குளிர்காலத்தில் உண்டாகும் மூட்டு வலி தொடர்பான அசெளகரியங்களை குறைத்திட பெரிதும் உதவியாக இருக்கும்
கொத்தமல்லி இலைகள் செரிமான அசெளகரியங்களை குறைத்திட பயனுள்ள தீர்வாகும். குளிர்காலத்தில் அஜீரண கோளாறு பிரச்சனை ஏற்படாமல் பாதுகாக்க செய்கிறது
வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் ஆரோக்கியமான சருமத்திற்கு உதவக்கூடும். குறிப்பாக, குளிர்காலத்தில் வறட்சியை போக்கி பளபளப்பான சருமத்திற்கு வழிவகுக்கிறது"
கொத்தமல்லி இலைகள் டீ இரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் இருக்கும் கால்சியம் அயனிகள், இரத்த நாளங்களின் பதற்றத்தை தளர்த்துவதாக அறியப்படுகிறது.
கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளுக்கு கொத்தமல்லி மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. கொத்தமல்லி இலைகளில் ஏராளமான ஆல்கலாய்டுகள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் உள்ளன. இந்த கூறுகள் பித்த கோளாறுகள் மற்றும் மஞ்சள் காமாலை போன்ற கல்லீரல் நோய்களை குணப்படுத்த உதவுகிறது.