இந்த விஷயம் தெரிந்தால் இனி தினமும் சுடுதண்ணீர் தான் குடிப்பீர்கள் !!
மருத்துவர்கள் பரிந்துரைப்பது வெந்நீர். சாதாரண தண்ணீரைக் குடிப்பதைவிட சூடுபடுத்திக் குடித்தால் உடலுக்கு நல்ல மாற்றம் கிடைக்கும்.
தினமும் சுடுதண்ணீர் குடித்துவருவதால் உடலில் உள்ள நச்சுக்கிருமிகள் அழிந்துவிடும்.
விடியலில் எழுந்ததும் சுடுதண்ணீர் குடித்தால் மனம் தெளிவாகும். உடல் ஆரோக்கியம் பெறும்.
செரிமானப் பிரச்சனைகள், மலச்சிக்கல்,பொடுகு மற்றும் தலைமுடி உதிர்தல் தடுக்கிறது.
வெதுவான சுடுதண்ணீர் குடித்தல் நல்லது. தொற்றுகிருமிகள் வெந்நீரால் அழிந்துவிடும். நல்ல சத்துக்களை மட்டும் தண்ணீரில் வைத்திருக்க உதவும்.
பிரியாணி போன்ற அசைவ உணவுகள் சாப்பிட்டபின் சுடுதண்ணீர் குடித்தால் குடல் செரிமானமடையும்.
சுடுதண்ணீர் உடல் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். நீரிழிவு நோய் வருவதைத் தடுக்கும்.