தொப்பையில் கொழுப்பு சேர்வது இந்நாட்களில் பலருக்கு உள்ள ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது.
இது உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும். இதனை விரட்டும் சில சூப்பர் உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்
கிரீன் டீயில் உள்ள சேர்மன்கள் தொப்பை கொழுப்பை வேகமாக கரைக்க உதவும்.
தினமும் ஒரு அவோகேடோ பழம் உட்கொண்டு வந்தால் தொப்பையில் சேர்ந்துள்ள கொழுப்பு வேகமாக குறையும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஓமம் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி உடல் எடையை குறைக்க உதவுகிறது. இது செரிமானத்திற்கும் சிறந்தது.
உடலில் வைட்டமின் டி மற்றும் கேல்சியம் அதிகமாக இருந்தால், தொப்பை கொழுப்பு குறையும் என ஆய்வுகள் கூறுகின்றன. கீரை இதற்கு சிறந்தது.
தொப்பை கொழுப்பை குறைத்து ஆரோக்கியமான எடையை பெற பால் மிக அவசியமாகும்.
தினமும் தயிர் உட்கொள்வது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, கொழுப்பை கரைத்து எடையையும் குறைக்கிறது.