நீரிழிவா... உடல் பருமனா... ‘இந்த’ சர்க்கரைகளை தாராளமா சாப்பிடலாம்!

Vidya Gopalakrishnan
Oct 16,2023
';

சர்க்கரை

அதிக கலோரி கொண்ட சர்க்கரை அதிகப்படியான ஆற்றலை கொடுக்கிறது. சர்க்கரை கொடுக்கும் அதீத ஆற்றலை பயன்படுத்தாதபோது, அதனால் உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்ந்து, உடல் பருமன அதிகரிக்கிறது.

';

சர்க்கரைக்கு மாற்று

சர்க்கரைக்கு மாற்றான பொருட்களை பயன்படுத்துவது மிகவும் பலன் தரும். இதன் மூலம் சர்க்கரை உண்ணும் பழக்கத்தை கட்டுப்படுத்துவது எளிது.

';

சீனித் துளசி

ஸ்டீவியா எனப்படும் இனிப்பு சீனித் துளசி இலைகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் உள்ள ஸ்டீவியோசைடு, ரெபாடையோசைடு போன்ற வேதிப்பொருள்கள்தான் இதன் இனிப்புக்கு முக்கியக் காரணங்கள்.

';

மாங்க் பழ சர்க்கரை

மெலன் வகையை சார்ந்த பழமான மாங்க் பழம் இரத்தச் சர்க்கரையை அதிகரிக்காத மற்றொரு இயற்கை இனிப்பு. சர்க்கரையை விட பல மடங்கு இனிமையானது. தீங்கு விளைவிக்கும் பக்கவிளைவுகளைக் கொண்ட செயற்கை இனிப்புகளுக்கு மிகச் சிறந்த மாற்றாகும்.

';

பேரீச்சம் பழ சர்க்கரை

பிரவுன் சர்க்கரையை விட பேரீச்சம் பழத்தில் அதிக நார்ச்சத்து உள்ளது. சர்க்கரைக்கு சிறந்த மாற்று. அதோடு பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனீஸ், வைட்டமின் பி6 மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களின் நல்ல ஆதாரம்.

';

தேங்காய் சர்க்கரை

தேங்காய் சர்க்கரை, தேங்காய் பனை சர்க்கரை என்றும் அழைக்கப்படுகிறது, இது தென்னை மரங்களின் பூ மொட்டுகளின் சாற்றில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு இயற்கை இனிப்பு ஆகும்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story