உலக அளவில் நாளுக்கு நாள் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கோண்டே வருகின்றது.
இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க நாம் நமது உணவில் பல வித மாற்றங்களை செய்ய வேண்டியது அவசியமாகும்.
இரத்த சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும் சில சூப்பர் உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
இன்சுலின் எதிர்ப்பை கட்டுப்படுத்த இலவங்கப்பட்டை மிக உதவியாக இருக்கும். இதை உட்கொள்வதால் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம்.
நெய்யும் இன்சுலின் எதிர்ப்பை கட்டுப்படுத்துகிறது. சரியான அளவில் நெய் உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ள இது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
இதில் அதிக அளவு மோனோசேசுரேடட் கொழுப்பு உள்ளது. இது சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. நீரிழிவு நோயாளிகள் தங்கள் டயட்டில் இதை கண்டிப்பாக சேர்க்க வேண்டும்.
அக்ரூட் பருப்பு இன்சுலின் எதிர்ப்பை கட்டுப்படுத்தி இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும். இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை