புகைப்பிடிக்கும்போது சிகரெட்டிலுள்ள தொண்ணூறு சதவிகித நிக்கோட்டின், புகைபிடிப்பவரது சுவாசத்தின் மூலம் மூச்சுக்குழாய் வழியாகச் சென்று நுரையீரலில் சேரத் தொடங்கிவிடும்.
நுரையீரலில் சேர்ந்துள்ள நச்சுகளை வெளியேற்ற, சில உணவு முறைகள் மற்றும் உடற்பயிற்சியை பின்பற்றவேண்டும்.
வெல்லம் நுரையீரலில் சிக்கியிருக்கும் கார்பன் துகள்களை அகற்றி மூச்சுக்குழாய் அழற்சி, மூச்சுத்திணறல், ஆஸ்துமாவிற்கு தீர்வாக அமைகிறது.
அழற்சி எதிர்ப்பு பண்பு, ஜிஞ்சரோல்ஸ் மற்றும் ஷோகல்ஸ் போன்ற பண்புகள் கொண்ட சுக்கு நுரையீரலில் உள்ள நச்சுக்களை நீக்கும் திறன் கொண்டது.
தண்ணீரை அதிக அளவில் அருந்துவதன் மூலம், நிக்கோட்டின் மட்டுமன்றி, நுரையீரலில் சேரும் அழுக்குகள் அனைத்தும் சிறுநீரகம் மற்றும் கல்லீரலுக்குத் தள்ளப்பட்டு உடலிலிருந்து வெளியேற்றப்படும்.
ஆன்டி ஆக்ஸிடன்கள், துத்த நாகம், வைட்டமின் சி, நிறைந்த துளசி சுவாச மண்டலத்தை வலுப்படுத்தி, மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா, இருமல் மற்றும் சளித் தொல்லைகளை போக்கவும் உதவுகிறது
தினமும், மூன்று முதல் பத்து முறை மூச்சுப்பயிற்சி செய்வது நல்லது. மூச்சுப்பயிற்சி செய்வதால் மூச்சுக்குழாய் வலுப்பெறும்.