அடிமைத்தனம் அந்த காலத்தில் உலக அளவில் பரவி இருந்தாலும், ஆப்பிரிக்க வம்சாவளி மக்கள்தான் இதனால் மிக அதிகமாக பாதிக்கப்பட்டார்கள்.
அடிமையாக இருந்த காலத்தில், இவர்களில் பெரும்பாலோர் வாங்கப்பட்டு விற்கப்பட்டனர். இன்றைய காலகட்டத்தில் உலகின் மூலை முடுக்கெல்லாம் கறுப்பின மக்களைக் காணக் காரணம் இதுதான்.
அடிமையாக இருந்த காலத்தில் தன் எஜமானுக்காக 200க்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றெடுத்த அடிமை ஒருவர் உள்ளார். இது மட்டுமே அவரது வேலையாக இருந்தது.
அவர் பெயர் பாடா சேகா. 19 ஆம் நூற்றாண்டில் பிரேசிலைச் சேர்ந்த நில உரிமையாளரால் அவர் அடிமையாக்கப்பட்டார்.
படா சேகாவின் நீளம் சுமார் 7 அடி 2 அங்குலம் என்று கூறப்படுகிறது. உடலளவிலும் மிகுந்த பலசாலியாக இருந்தார். அவர் சுமார் 130 ஆண்டுகள் வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.
அந்த காலத்தில் பலசாலியான, அதிக உயரம் கொண்ட அடிமைகளுக்கு அதிக மவுசு இருந்தது. இவர்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டார்கள்
அதிக பலசாலியான பாடா சேகாவை அவரது முதலாளி 'ப்ரீடர்' என அழைத்தார். அவர் மூலம் அதிக குழந்தைகளை பூமிக்கு கொண்டு வருவதே அவரது முதலாளியின் நோக்கமாக இருந்தது.
பாடா சேகாவின் குழந்தைகள் அவரை போல் பலசாலியாக இருக்கும், ஆகையால் அவர்களை விற்று அதிக பணம் ஈட்டலாம் என்பது முதலாளியின் திட்டமாக இருந்தது.
பாட்டா அடிமைத்தனத்தின் போது தனது எஜமானுக்காக 200க்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றெடுத்தார் என்று கூறப்படுகின்றது.