சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய பிறகு, அந்த பகுதியில் முதலில் தடம் பதித்த முதல் நாடு இந்தியாவாகும். உலகிலேயே ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய வல்லரசு நாடுகள் மட்டுமே இதுவரை செயற்கைக்கோளை அனுப்பி சாதித்து உள்ளன. இதில் 4 வது நாடாக இணைந்து இருக்கிறது வளரும் நாடான இந்தியா.
விக்ரம் லேண்டரை 4 ஆண்டுகளுக்கு முன்னர் நிலவுக்கு அனுப்பிய சந்திரயான் 2 ஆர்பிட்டர் புகைப்படம் எடுத்திருக்கிறது. இதனை இஸ்ரோ டிவிட்டரில் வெளியிட்டது. ஆனால் சில நிமிடங்கள் கழித்து இதனை இஸ்ரோ டெலிட் செய்திருக்கிறது. இருப்பினும் இஸ்ரோவின் பதிவு ஸ்கிரீன் ஷாட்களாக டிரெண்டாகி வருகின்றன.
நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய இந்தியாவின் விண்வெளி ஆய்வு அமைப்பான ISRO அனுப்பிய சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக கடந்த 23ம் தேதி தரையிறங்கிய நிலையில் 4 ஆண்டுக்கு முன்னர் நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 2 ஆர்பிட்டர் விக்ரம் லாண்டரை துல்லியமாக போட்டோ எடுத்திருக்கிறது.
ஆகஸ்ட் 24 அன்று, இஸ்ரோ வெளியிட்டுள்ள புதிய தகவலில் சந்திரயான் -3 இன் அனைத்து நடவடிக்கைகளும் திட்டமிட்டபடி இருப்பதாகவும், அனைத்து அமைப்புகளும் இயல்பானவை என்றும் கூறியது.
சந்திரயான்-2 இன் ஆர்பிட்டர் உயர்-தெளிவு கேமரா (OHRC) சந்திரயான்-3 இன் இந்த படங்களை ஆகஸ்ட் 23, 2023 அன்று விண்கலம் சந்திரனின் தென் துருவத்தில் தடம் பதித்த பிறகு எடுத்தது.
சந்திரயான்-3 சாஃப்ட் லேண்டிங் செய்யப்பட்ட சுமார் நான்கு மணி நேரத்திற்குப் பிறகு, சந்திரனின் தூசிகள் அனைத்தும் படிந்த பிறகு, பிரக்யான் ரோவர் வெற்றிகரமாக விக்ரம் லேண்டரில் இருந்து வெளியேறியது.
சந்திரயான்-3 சாஃப்ட் லேண்டிங் செய்யப்பட்ட சுமார் நான்கு மணி நேரத்திற்குப் பிறகு, சந்திரனின் தூசிகள் அனைத்தும் படிந்த பிறகு, பிரக்யான் ரோவர் வெற்றிகரமாக விக்ரம் லேண்டரில் இருந்து வெளியேறியது.
விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இரண்டும் 14 பூமி நாட்களுக்கு நிலவில் பல சோதனைகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.