எண்ணெய் சார்ந்த க்ளென்சரைப் பயன்படுத்தி சருமத்தில் உள்ள அசுத்தங்கள், அதிகப்படியான மேக்கப்பை அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் அவை துளைகளை அடைத்து தோல் பிரச்சினைகளை ஏற்படுத்தி அழகைக் குறைக்கும்
சரும பராமரிப்புப் பொருட்களை தேர்ந்தெடுக்கும்போது, அவற்றில் அதிக அளவில் ரசாயனங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்
சருமத்தை ஹைட்ரேட் செய்ய நீரால் முகத்தை அலம்பும் பழக்கம் அவசியம். மேற்கத்திய தோல் பராமரிப்புகளில், முகத்தை தண்ணீரில் கழுவவதும் முக்கியமானதாக கருதப்படுகிறது
முகத்தில் அவ்வப்போது காபியை மாஸ்காக போட்டு, உலரவிட்டு கழுவி வந்தால், முகப் பொலிவு கூடும்
சருமத்தின் pH சமநிலையை மீட்டெடுக்கவும், ஹைட்ரேட் செய்யவும், மற்ற பொருட்களின் உறிஞ்சுதலை அதிகரிக்கவும் டோனர் உதவுகிறது. இதை தினமும் பயன்படுத்தலாம்
கொரிய தோல் பராமரிப்பு தயாரிப்புகளில் முகத்தில் சத்தான சீரம் போட்ட முகமூடியை சிறிது நேரம் போட்டு வைத்து, சருமம் நீரை உறிஞ்சிய பிறகு எடுப்பது சிறந்தததாக கருதப்படுகிறது. இது சருமத்தின் அடுக்குகளில் அத்தியாவசிய பொருட்களை வழங்க உதவுகிறது
சூரியன் பாதிப்பைத் தடுக்க SPF சன்ஸ்க்ரீனைப் பயன்படுத்து நல்லது
கொரிய தோல் பராமரிப்பு நடைமுறைகளில் கண்களைச் சுற்றி கிரீம் போடுவதும் அடங்கும். ஏனெனில் கண்களைச் சுற்றியுள்ள உணர்திறன் வாய்ந்த சருமத்திற்கு சிறப்பு கவனிப்பு தேவை. கண் கிரீம்கள் வீக்கம், கருமையான வட்டங்கள் மற்றும் மெல்லிய சுருக்கங்களை போக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்ட இந்த கட்டுரையை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம்