தக்காளி நமது சமையலில் தவிர்க்க முடியாத ஒரு காய்கறி உணவின் தோற்றம், நிறம் மற்றும் சுவை போன்றவற்றை தீர்மானிப்பதில் தக்காளியின் பங்கு மிகவும் முக்கியமானது. எனிமு அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
தக்காளி இயற்கையாகவே அமிலங்கள் நிறைந்தது. எனவே அதிகப்படியான தக்காளி சாப்பிட்ட பிறகு, அதிகப்படியான இரைப்பை அமிலம் காரணமாக நெஞ்செரிச்சல் அல்லது அமில பிரச்சனை ஏற்படலாம்.
தக்காளியில் பொட்டாசியம் அதிக அளவு உள்ளது. மேலும், அதிக அளவு ஆக்சலேட் நிறைந்த பொருட்களை அதிகமாக சாப்பிடும் போது, சிறுநீரக பிரச்சினைகள் ஏற்படலாம்.
குடல் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய பொதுவான அலர்ஜி உணவுகளில் தக்காளியும் ஒன்றாகும். எனவே, தக்காளியை அளவோடு சாப்பிடுவது நல்லது.
தக்காளியில் சோலனைன் எனப்படும் ஆல்கலாய்டுகளால் நிரம்பியிருப்பதால், அளவிற்கு அதிகமாக சாப்பிடும் போது மூட்டுகளில் வீக்கம் மற்றும் வலியை ஏற்படுத்தும்
தக்காளியில் உள்ள ஹிஸ்டமைன் என்ற கலவை ஒவ்வாமை எதிர்விளைவுகளுக்கு வழிவகுக்கும். அளவிற்கு அதிக தக்காளி தோல் அலர்ஜியை ஏற்படுத்தும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.