நார்ச்சத்து, தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்ற பைட்டோநியூட்ரியன்கள் நிறைந்துள்ள பாகற்காய் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது என்பதில் மாற்று கருத்து இருக்கவே முடியாது.
பாகற்காய் இன்சுலினை தூண்டு ஆற்றல் கொண்டது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.
பாகற்காயில் ஏராளமான நன்மைகள் இருந்தாலும், அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வது பாதிப்பை ஏற்படுத்தும். அளவோடு உண்டால் பாகற்காயின் நன்மைகளை முழுவதுமாக பெறலாம்.
கர்ப்ப காலத்தில் பாகற்காயை அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்வதால் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
நீரிழிவு நோயாகளுக்கு வரப்பிரசாதமாக உள்ள இரத்த சர்க்கரை குறைவாக உள்ளவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
பாகற்காயில் உள்ள லெக்டின் எனும் புரதம் கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நொதிகளை அதிகரிக்கும்.
பாகற்காயை அளவிற்கு அதிகம் எடுத்துக் கொள்வதால் வயிற்று வலி உண்டாகும் வாய்ப்பு உள்ளது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது