கல்லீரல்

உடலில் புரதங்கள், கொலஸ்ட்ரால் மற்றும் பித்த உற்பத்தி முதல் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை சேமித்து வைப்பது வரை பல முக்கிய செயல்பாடுகளைச் செய்யும் ஆற்றல்மிக்க உறுப்பு கல்லீரல். நம் உடலில், மீண்டும் வளரக் கூடிய ஒரேயொரு உள்ளுறுப்பு என்றால் அது கல்லீரல் மட்டுமே.

Vidya Gopalakrishnan
Sep 04,2023
';

உப்பு

உப்பில் சோடியம் உள்ள நிலையில் அதிக உப்பை உண்பதால் உடலில் கூடுதல் நீர் தேங்குகிறது. இதனால், கல்லீரலில் வீக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது.

';

வலி நிவாரணிகள்

அளவிற்கு அதிகமான வலி நிவாரணிகள் உட்கொண்டால் கல்லீரல் பாதிப்பு ஏற்படும். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ளும் தவறை செய்யாதீர்கள்.

';

மைதா

மைதா மாவில் செய்யப்பட்ட உணவுகள் சுவையானது தான். ஆனால் தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் இல்லாத மைதா கல்லீரலுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும்.

';

ஆல்கஹால்

அதிகப்படியான ஆல்கஹால் உங்கள் கல்லீரலை சேதப்படுத்தும். இதனால் ரத்த வாந்தி, மஞ்சள் காமாலை, புற்றுநோய் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

';

துரித உணவுகள்

துரித உணவுகள் நீண்ட நேரம் கெட்டுப் போகாமல் இருக்க பயன்படுத்தப்படும் அஜினோமோட்டோவினால் உங்கள் கல்லீரலின் செயல் திறன் பலவீனமடைகிறது.

';

சர்க்கரை

அதிக அளவிலான இனிப்பு உணவுகள் கல்லீரலை அதிக அளவில் சேதப்படுத்தும். சர்க்கரை ஆல்கஹாலை போலவே கல்லீரலை சேதப்படுத்தும்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story