டாப் 10 மலையாள த்ரில்லர் படங்கள்
இப்படத்தை எம். பத்மகுமார் இயக்கிய விறுவிறுப்பான குற்றவியல் திரைப்படமான "ஜோசப்" 2018 ஆம் ஆண்டு வெளியானது.
தனது குடும்பம் தற்செயலாக செய்யும் குற்றத்தை மறைக்க ஒரு மனிதனின் முயற்சிகளைப் பற்றிய ஒரு த்ரில்லர் மூவி.
2020 ஆம் ஆண்டு வெளியான மலையாளப் படமான அஞ்சம் பத்திர கிரைம் திரில்லர் திரைப்படமாகும். ஒரு தொடர் கொலைகாரனைப் பற்றிய படம்.
மார்ட்டின் பிரக்கட் இயக்கிய நயாட்டு படம் மூன்று போலீஸ் அதிகாரிகளின் அதிகாரம், ஒழுக்கம் மற்றும் வாழ்வு குறித்து விவரிக்கும் படம்.
இது ஒரு பக்கா த்ரில்லர் படமாகும். தொடர்ச்சியான கொடூரமான கொலைகளை கண்டுபிடிக்கும் தடயவியல் நிபுணரின் க்ரைம் த்ரில்லர் தான் ஃபோரன்சிக்.
சூப்பரான த்ரில்லர் கதை. மெமரிஸ் படத்தில் ஞாபக மறதி கொண்ட ஒரு போலீஸ்காரர் தொடர் கொலைகளை விசாரிக்கிறார். அடுத்தடுத்து நகரும் காட்சி நம்மை ரசிக்க வைக்கும்.
சியூ சூன் படத்தில் ஃபஹத் பாசில், ரோஷன் மேத்யூ மற்றும் தர்ஷனா ராஜேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். சஸ்பென்ஸ் நிறைந்த படம்.
2019-ம்ஆண்டு மலையாளத்தில் வைரஸ் திரைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. நிபா வைரஸின் தாக்குதல் பற்றியப்பதிவே இந்தப் படம்.
உளவியல் திரில்லர் மூவி தான் முன்னறிப்பு மெதுவாக நகரும் திரைக்கதை. ஆனால் எதிர்பாராத திருப்பம் நம்மை சீட்டின் நுனியில் உட்கார வைக்கும்.
நவீன உறவுகளின் இருண்ட பக்கத்தை ஆராயும் ஒரு காதல் திரில்லர் படம் தான் இஷ்க்.