இன்றைய துரிதமான வாழ்க்கையில், சமைத்து பிரிட்ஜில் வைத்து சேமித்து, பின்னர் சூடுபடுத்தி சாப்பிடும் பழக்கம் பலருக்கு உள்ளது.
சில உணவுகளை மீண்டும் சூடுபடுத்துவது அதனை விஷமாக்கி தீவிர உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
பிரிட்ஜில் வைத்த, பழைய சாதத்தை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிட்டால், அதில் நச்சுத்தன்மை அதிகரித்து, புட் பாய்சனாக மாறிவிடும்.
எந்த வகை சமையல் எண்ணெயாக இருந்தாலும், மீண்டும் மீண்டும் சூடுபடுத்தும் போது, எண்ணெயின் அடர்த்தி அதிகரித்து, புற்று நோய், இதய நோய்கள் ஏற்படக் காரணமாக அமையும்.
பொரித்த அல்லது வேகவைத்த முட்டையை மீண்டும் சூடாக்கி சாப்பிடுவதன் காரணமாக, வயிற்று போக்கு, வயிற்று வலி ஆகியவை உண்டாகலாம்.
காளான் உணவை மீண்டும் சூடுபடுத்தும்போது விஷமாக மாறி, செரிமானக் கோளாறுகள், வயிற்று உபாதைகளை உண்டாக்கும்.
கோழி இறைச்சியில் அதிக புரோட்டீன் உள்ளதால், சிக்கனை மீண்டும் சுட வைத்து சாப்பிடுவதால் செரிமான பிரச்சனை ஏற்படும்.
கீரையை மீண்டும் சூடாக்கி சாப்பிடுவதன் மூலம் புற்றுநோய் ஏற்படக் கூடும். மீண்டும் சூடாக்கப்பட்ட பிறகு அதில் உள்ள நைட்ரேட்டுகள் வேறு ஒரு பொருளாக மாறுகிறது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.