ஆலுவேரா என்னும் கற்றாழை சரும பராமரிப்பிற்கு மிகவும் சிறந்தது என்பது அனைவரும் அறிந்ததே. கடையில் விற்கும் ஆலுவேரா ஜெல்லை காசு கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை.

Vidya Gopalakrishnan
Aug 17,2023
';


கற்றாழை செடி வளப்பதும் மிகவும் சுலபம். சுத்தமான எந்தவித கலப்படமும் இல்லாத ஆலு வேரா ஜெல்லை சுலபமாக தயாரிக்கலாம்.

';


கற்றாழை செடிகளில் இருந்து சில கிளைகளை உடைத்து மேலே இருக்கும் பச்சை நிற தோலை நீக்கிவிட்டு, உள்ளே இருக்கும் ஜெல்லை ஸ்பூனால் தனியாக எடுக்கவும். இதனை சுத்தமாக தண்ணீர் இல்லாமல் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து எடுக்கவும்.

';


கடைகளில் ஜெலட்டின் பவுடர் வாங்கலாம். இது ஜெல்லி செய்வதற்காக பயன்படுத்தும் ஒரு பவுடர். ஒரு சிறிய கப்பில் ஜெலட்டின் பவுடரை 1 டேபிள் ஸ்பூன் சேர்த்துக் கொண்டு, அதில் 1/2 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி நன்றாக கலக்கவும்.

';


கலவையை அடுப்பில் நேராக வைக்காமல், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து, அதன் மீது ஜெலட்டின் பவுடர் கலவையை வைத்து 3 லிருந்து 5 நிமிடங்கள் வரை சுட வைத்தால் ஜெல் பதத்திற்கு வந்துவிடும்.

';


ஜெலட்டின் கலவை ஆறிய உடன் மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள ஆலோவோராவை கலந்தால் ஆலுவேரா ஜெல் ரெடி.

';


கடைகளில் கிடைக்கும் ஆலு வேரா ஜெல்லில் நிச்சயமாக ஏதாவது ஒரு கெமிக்கல் கலந்துதான் இருக்கும். அதனால் தான் நீண்ட நாட்களுக்கு ஜெல் கெட்டுப்போகாமல் இருக்கிறது.

';


நம் வீட்டில் தயார் செய்யும் இந்த ஆலோ வேரா ஜெல்லை 10 நாட்களுக்கு மட்டுமே நம்மால் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

';

VIEW ALL

Read Next Story