ஆரோக்கியமான உணவுத் திட்டம் அதிக ஆற்றலை அளிக்க உதவும்.
நமது வாழ்க்கை முறையில் செய்யும் சிறு மாற்றங்கள் பெரிய அளவிலான விளைவுகளை ஏற்படுத்தும்
உணவு என்பது உடலுக்கான ஒரு அடிப்படை தேவை என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்
உணவின் சுவையை விட, அதன் ஊட்டச்சத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்
காய்கறிகள் அதிகமாக உள்ள உணவும், சமைக்காமல், இயற்கையாகவே உண்ணக்கூடியவற்றையும் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்
பழங்கள், வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிப்பவை, அதாவது அவையே நமது ஆயுளை நீட்டிகின்றன
காய்கறிகள் ஒருபோதும் உடலுக்கு தீமையை செய்வதில்லை, அவற்றை நாம் உண்ணும் முறையும், சமைக்கும் விதமும் தான் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது
தினசரி உண்ணும் உணவு சமச்சீரானதாக இருந்தால், ஆயுள் கெட்டி என்று சொல்லிக் கொள்ளலாம்
வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள்