உலக அளவில் பலரை அதிக அளவில் பாதிக்கும் நோய்களில் நீரிழிவு நோயும் ஒன்றாகும்.
சில எளிய ஆரோக்கியமான வழிகளின் மூலம் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம்.
இரவில் சில வழிமுறைகளை பின்பற்றினால், இரவு நேரத்தில் சுகர் லெவல் திடீரென அதிகரிப்பதை தவிர்க்கலாம்.
இரவு தூங்கும் முன் தினமும் ஒரு முறை இரத்த சர்கரை அளவை செக் செய்வது நல்லது.
இரவு உணவில் மிகவும் லேசான, எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவுகளையே உட்கொள்ள வேண்டும்.
இரவு நேரங்களில், இனிப்புகள், துரித உணவுகள், அதிக கொழுப்புள்ள உணவுகள் ஆகியவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
தூங்கும் முன் மதுபானம், காபி, டீ, சோடா, சர்க்கரை அதிகம் உள்ள பானங்கள் ஆகியவற்றை உட்கொள்ள வேண்டாம்.
தூங்கும் முன் நடப்பது அல்லது லேசான உடற்பயிற்சிகளை செய்வது நல்லது.