யூரிக் அமிலத்தை குறைக்க உதவும் சில இயற்கையான வழிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்
சிவப்பு இறைச்சி, மீன், உறுப்பு இறைச்சி போன்ற பியூரின் அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்கவும்
சர்க்கரை மற்றும் ஃப்ருக்டோஸ் உள்ள பழங்கள், தேன் ஆகியவற்றையும் அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கவும்.
அதிக தண்ணீர் குடித்தால் சிறுநீரகத்திலிருந்து விரைவாக யூரிக் அமிலத்தை வெளியேற்றுவதில் உதவி கிடைக்கும்.
மதுபானத்தை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இது யூரிக் அமிலத்தை அதிகப்படுத்தலாம்.
காபி குடிப்பது யூரிக் அமில அளவை குறைக்க உதவும்.
சத்தான உணவுகளை உட்கொண்டு தேவையான உடற்பயிற்சி செய்து உடல் எடையை கட்டுக்குள் வைப்பதும் யூரிக் அமில அளவை கட்டுப்படுத்த உதவும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.