எடை இழப்பு இலக்குகளை விரைவில் அடைய, இண்டர்மிடெண்ட் ஃபாஸ்டிங் டயட்டிங் முறையை பின்பற்றுபவரா நீங்கள்? இது உங்களுக்கான கட்டுரை...
ஒரு நாளில் 16:8 என்ற மணிக கணக்கின்படி இண்டர்மிடெண்ட் ஃபாஸ்டிங் முறையைக் கடைப்பிடிப்பவர்கள் இருதய நோயால் இறப்பதற்கு 91 சதவீதம் அதிக அபாயம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்
சிகாகோவில் சமர்ப்பிக்கப்பட்ட உணவுக் கட்டுப்பாடு உத்தி, ஆய்வில் பகுப்பாய்வு செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆய்வு மதிப்பாய்வு செய்யப்படவில்லை அல்லது வெளியிடப்படவில்லை
கொலஸ்ட்ரால் அளவுகள் மற்றும் வளர்சிதை மாற்றம் அதிகரிப்பது என்பதற்காக பிரபலமடைந்துள்ள நிலையில், இந்த ஆராய்ச்சி எச்சரிக்கை மணி அடிக்கிறது
8 முதல் 10 மணி நேர இடைவெளியில் அனைத்து கலோரிகளையும் உட்கொண்டவர்களுக்கு இதய நோய் மற்றும் பக்கவாதத்தால் இறக்கும் அபாயம் 66 சதவீதமாக இருக்கிறது
நேரம் கட்டுப்படுத்தப்பட்ட உணவுடன் தொடர்புடைய உடல்நலப் பலன்கள் மற்றும் பாதிப்புகளை ஆயும் ஆய்வு இது. இதை ஜீ மீடியா தனிபட்ட முறையில் உறுதி செய்யவில்லை.