உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகமானால் அதன் காரணமாக இதய நோய்கள், மாரடைப்பு, பக்கவாதம் ஆகிய பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
கெட்ட கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் வீட்டு வைத்தியங்கள் பற்றி இங்கே காணலாம்.
எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும். இது எடை இழப்பில் உதவுவதோடு இதய நோய் அபாயத்தைக் குறைக்கும்.
அக்ரூட் பருப்புகள், குறைந்த அடர்த்தி கொண்ட கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.
பெர்ரி வகை பழங்களில் ஆண்டிஆக்சிடெண்டுகள் மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளன. இவை இரத்த அழுத்தம் மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன. கெட்ட கொழுப்பை குறைத்து இவை நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றன.
நெல்லிக்காய் ஒரு சூப்பர்ஃபுட் ஆக கருதப்படுகின்றது. மக்கள் பொதுவாக அதிக கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த நெல்லிக்காயை உட்கொள்கிறார்கள்
தினமும் ஒன்று அல்லது இரண்டு பல் பூண்டு சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ரால் அளவு 10% குறையும். கெட்ட கொலச்ட்ராலைக் குறைக்க விரும்பும் நபர்கள் தினமும் இரண்டு பூண்டு பற்களை சாப்பிடலாம்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.