இரத்த சர்க்கரை அளவை நாள் முழுதும் கட்டுக்குள் வைக்க நாம் காலையில் உட்கொள்ள வேண்டிய சில சூப்பர்ஃபுட்களை பற்றி இங்கே காணலாம்.
நாள் முழுதும் சுகர் லெவலை கட்டுக்குள் வைக்க காலையில் பாகற்காய் சாறு குடிப்பது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகின்றது.
நீரிழிவு நோயாளிகள் காலையில் வெந்தய நீர் குடிப்பது மிகவும் நல்லது. இதன் மூலம் இரத்த சர்க்கரை அளவு நாள் முழுதும் கட்டுக்குள் இருக்கும்.
காலையில் நெல்லிக்காய் சாப்பிடுவது நாள் முழுவதும் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்து உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு மஞ்சள் ஒரு சஞ்சீவியாக வேலை செய்கிறது. காலையில் இதை உட்கொண்டால் நாள் முழுதும் சுகர் லெவல் கட்டுப்பாட்டில் இருக்கும்.
காலையில் இலவங்கப்பட்டை தேநீர் குடிப்பது இரத்த சர்க்கரை அளவை குறைப்பதுடன் இன்னும் பல ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கின்றது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.