கல்லீரல்

நாம் சாப்பிடுகிற ஒவ்வோர் உணவும் ஏதாவது ஒரு வடிவில் கல்லீரலைச் சென்றடையும். கல்லீரலைச் சுத்திகரிக்கவும் நச்சுக்களை நீக்கி பாதுகாக்கவும் உதவும் உணவுப் பொருட்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.

Vidya Gopalakrishnan
Mar 06,2023
';

இஞ்சி

இஞ்சி, உணவின் சுவையைக் கூட்டுகிறது. அதோடு, கல்லீரல் பாதுகாப்பிலும் முக்கிய பங்காற்றுகிறது. இஞ்சி உடலின் செரிமான மண்டலத்தைச் சீராக்கும். வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும்.

';

நெல்லிக்காய்

நெல்லிக்காய் கல்லீரலுக்குப் புத்துயிரூட்டக்கூடியது. வீங்கிய நிலையில் இருக்கும் கல்லீரல்களைச் சரிசெய்யும் ஆயுர்வேத சிகிச்சையில், நெல்லிக்காய் பயன்படுத்தப்படுகிறது.

';

ஒமேகா-3 உணவு

கல்லீரலைப் பாதுகாக்க தினசரி உணவில் ஒமேகா-3 அதிகமுள்ள உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். வஞ்சிர மீன், முட்டை, வால்நட் போன்றவற்றில் ஒமேகா-3 உள்ளது.

';

பூண்டு

பூண்டு, வெங்காயம் போன்ற மணமுள்ள உணவுகளும் கல்லீரலைப் பாதுகாக்கின்றன. உடலின் நச்சுக்களை வெளியேற்றுவதற்கு கல்லீரலுக்குத் தேவையான என்ஸைம் உற்பத்திக்கு இதிலுள்ள சல்ஃபர் உதவுகிறது.

';

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரியில் உள்ள பாலிபினால் (Polyphenols) மற்றும் அந்தோசயனின் (Anthocyanins) கல்லீரலில் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது.

';

பீட்ரூட்

பீட்ரூட்டில் உள்ள ஃபிளேவனாய்ட்ஸ் (Flavonoids) என்ற நிறமி, கல்லீரலைப் பாதுகாக்கிறது. பீட்ரூட்டை நீண்ட நாட்களுக்குச் சாப்பிடுவது கல்லீரல் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கும்.

';

க்ரீன் டீ

க்ரீன் டீயில் கேடசின் அதிகம் உள்ளது. இது ஆல்கஹால் அல்லாத கல்லீரலில் சேரும் பிற கொழுப்பைக் குறைக்கிறது. கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

';

பப்பாளி

பப்பாளி மற்றும் அதன் விதைகளை உட்கொள்வது கொழுப்பு கல்லீரலில் கொழுப்பாக மாறாமல் தடுக்கிறது. பப்பாளியை தேனுடன் சேர்த்து சாப்பிடுவது நன்மை தரும்.

';

மஞ்சள்

மஞ்சள் ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும். கல்லீரலில் படிந்திருக்கும் கொழுப்பை இது அழிந்து விடும். கல்லீரல் கொழுப்பை நீக்க, பாலில் கால் ஸ்பூன் மஞ்சளை சேர்த்து குடித்து வந்தால் நிவாரணம் கிடைக்கும்.

';

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். வாழைப்பழம் செரிமானத்திற்கும் உதவுகிறது.

';

ஆப்பிள் வினிகர்

தினமும் 2 ஸ்பூன் ஆப்பிள் வினிகர் கல்லீரலில் படிந்துள்ள கொழுப்பை எரிப்பதோடு எடையையும் குறைக்க உதவுகிறது. இது கல்லீரல் வீக்கம், வயிற்று வலியையும் குறைக்கிறது.

';

கல்லீரல்

கல்லீரலில் சேரும் கொழுப்பை, நச்சுப்பொருட்களை வெளியேற்ற வேண்டியது அவசியம். அவை பெரிய நோய்களாக மாறி நம்மைப் பாதிப்பதற்கு முன்னர் இயற்கை வழிமுறைகள் மூலம் கல்லீரலைக் காப்போம்!

';

VIEW ALL

Read Next Story