1970 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தார் குஷ்பு.
அவர் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் துவங்கியபோது அவரது பெற்றோர் அவருக்கு இந்த பெயரை அளித்தனர்.
மும்பையிலிருந்து தமிழ் திரையுலகுக்கு நடிக்க வந்த குஷ்புவை ரசிகர்கள் ஆசையோடு வரவேற்றனர்.
குஷ்புவின் குழந்தை முகம் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்களை அள்ளிக்கொடுத்தது.
அரசியல் பிரவேசம் செய்த குஷ்பு முதலில் 2010 ஆம் ஆண்டு திமுக-வில் சேர்ந்தார்.
2014 ஆம் ஆண்டு சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து அவர் காங்கிரசில் இணைந்தார்.
2020 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதி காங்கிரசை விட்டு விலகில குஷ்பு அதே நாளில் பாஜக-வில் சேர்ந்தார்.
சில நாட்களுக்கு முன்னர் குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
தனக்கு எட்டு வயதாக இருந்தபோது, தனது தந்தையால் பாலியல் ரீதியாக வற்புறுத்தப்பட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஒரு குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் போது, அந்த வடு வாழ்நாள் முழுவதும் இருக்கும் என அவர் தெரிவித்தார்.