நுரையீரலில் அழுக்குகளும் நச்சுக்களும் சேர்வதால், பலவீனமடைந்து ஆஸ்துமா, நிமோனியா, நுரையீரல் புற்றுநோய், நுரையீரலில் நீர் நிரம்புதல் போன்ற நோய்களுக்கு ஆளாக நேரிடும்.
நுரையீரலை எந்த விதமான நோய் பாதிப்புகளில் இருந்தும் காக்க உங்கள் நச்சுக்களையும் அழுக்குகளையும் நீக்கி அதனை வலுப்படுத்தும் உணவுகளை சேர்த்துக் கொள்வது அவசியம்.
ஒமேகா கொழுப்பு அமிலங்கள் நிரைந்த வாதுமை பருப்பு நுரையீரலில் ஏற்படும் வீக்கத்தை போக்கி ஆஸ்துமாவை குணப்படுத்தும்.
மஞ்சளில் நுரையீரல் நோய்களை குணப்படுத்தும் ஆன்டி - செப்டிக் ஆன்டி-வைரல் பண்புகளை கொண்டது. மேலும், இது வீக்கத்தை போக்குகிறது.
இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் இருப்பதால், சுவாசக் குழாயிலிருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது. மேலும், நிரையீரலின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
பூண்டில் உள்ள பிளவநாய்டுகள் மற்றும் அல்லிசின் ஒரு ஆண்டிபயாடிக் முகவராக செயல்பட்டு சுவாச தொற்றுகளை குணப்படுத்துகிறது. ஆஸ்துமா நோயாளிகளுக்கு பூண்டு அதிசயங்களைச் செய்கிறது.
ஆளி விதைகள், ரேடியேஷன் பாதிப்பில் இருந்து நுரையிரல் திசுக்களை பாதுகாத்து, புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
விட்டமின் சி, கேரோடினாய்டுகள், போலேட், பைட்டோகெமிக்கல் அடங்கிய ப்ரோக்கலி, நுரையீரல் பாதிப்புகளை தடுத்து காக்கிறது.
வெல்லம் நுரையீரலில் சிக்கிய கார்பன் துகள்களை அகற்றி, மூச்சுக்குழாய் அழற்சி, மூச்சுத்திணறல், ஆஸ்துமா மற்றும் பிற சுவாசக் கோளாறுகளிலிருந்தும் பாதுகாக்கும்.
பீட்ரூட் ரத்த அழுத்தத்தை குறைத்து, சுவாசத்தை சீர்படுத்தி நுரையீரகுக்கு செல்லும் ஆக்ஸிஜனை மேம்படுத்துகிறது.