உணவு உட்கொண்ட பிறகு புரதங்கள் உங்கள் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகின்றன. ஆகையால் அனைவரும் தங்கள் உணவில் 'லீன் புரோட்டீன்' சேர்த்துக்கொள்ள வேண்டும்.
ஃபைபர் உணவில் கூடுதல் கலோரிகளைச் சேர்க்காமல் உங்கள் பசியை அடக்குகிறது.
குறைந்த கலோரி கொண்ட உணவுப் பொருட்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை நோக்கி உங்கள் ரசனையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
அதிக நீர்ச்சத்து உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது உங்களை குறைந்தபட்ச கலோரிகளால் நிரப்புகிறது.
சுறுசுறுப்பாக இருங்கள். வாகிங், உடற்பயிற்சிகள் ஆகியவற்றை தினசரி வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.
பசியை கட்டுப்படுத்த சாப்பாட்டுக்கு முன்னர் காய்கறிகள் போட்ட சூப் குடிக்கலாம்.
நாம் உணவு உட்கொள்ளும் போது, மெதுவாக சாப்பிடுவதையும், நன்றாக மென்று சாப்பிடுவதையும் பழகிக்கொள்ள வேண்டும்.
உணவில் அதிக அளவில் காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்துக்கொள்வது எடையை அதிகரிக்காமல் நிரம்பிய உணர்வை அளிக்கும்.