கெட்ச்சப்-ஐ ஃபிரிட்ஜில் வைக்க வேண்டாம். ஒரு மாதம் வரை சாதாரணச் சூழலிலேயே கெடாமல் இருக்கக் கூடியது கெட்ச்சப். ஃபிரிட்ஜில் வைத்தால், இறுகிவிடும்.
துளசி, ரோஸ்மெரி அல்லது மற்ற எந்த மூலிகை இலைகளையும் ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது. பிரிட்ஜில் வைப்பதால், மருத்துவகுணம் போய் , பயன்படுத்தினாலும், உபயோகம் இல்லாததாக மாறிவிடும்.
தேங்காய், ஆலிவ் அல்லது வேறு வகையான சமையல் எண்ணெய் எதுவாக இருந்தாலும், பிரிட்ஜில் விரைவாக கெட்டியாகும். அவற்றை உங்கள் சமையலறையில் இருண்ட, குளிர்ந்த அலமாரியில் வைப்பது நல்லது
சமைத்த சிக்கனை பிரிட்ஜில் வைத்தால் அது கெட்டுவிடும். அதன் சுவை மாறுவது மட்டுமின்றி, குளிர்ந்த வெப்பநிலையில் சேமித்து வைத்து சாப்பிடுவதால் புட் பாய்ஸன் மற்றும் பல செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம்.
தேனை ஃபிரிட்ஜில் வைத்தால், மணல்போலக் கடினமாகவும், சுவை மாறியும் போய்விடும். ஏறக்குறைய உபயோகிக்க முடியாத அளவுக்கு தேன் மாறிவிடும்.
முட்டையை பிரிட்ஜில் வைப்பது முற்றிலும் தவறு. ஏனென்றால் முட்டையின் மேல் பாக்டேரியாக்கள் இருக்கக் கூடும். இவற்றை பிரிட்ஜில் வைப்பதன் மூலாம் பாக்டேரியாக்கள் பன்மடங்காகும்
காபி தூள் அல்லது காபி கொட்டை ஆகியவற்றைல் காற்று புகாத பாட்டிலில் வைத்திருந்தாலே போதுமானது. ஃபிரிட்ஜில் இருந்து வெளியாகும் ஈரப்பதம் காபித் தூளை கெட்டுப்போகச் செய்துவிடும்.
ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் வகைப் பழங்களை பிரிட்ஜில் வைத்தால், இந்தப் பழங்களின் சிட்ரஸ் அமிலத்தை பாதித்து, சுவையை மாற்றிவிடும்.
அதிகக் குளிர் தக்காளியின் பளபளப்பையும் சுவையும் பாதிக்கக்கூடியது. காற்றுப்புகக்கூடிய சாதாரணச் சூழலிலேயே தக்காளி சில நாள் வரை கெடாமல் இருக்கும்.
அவகேடோ பழத்தை ஃபிரிட்ஜில் வைத்தால், பழுக்கவே பழுக்காது. மேலும், அதன் சுவையும் மாறிவிடக்கூடும்.
பூண்டை ஃபிரிட்ஜில் வைத்தால், பூண்டின் சுவை கெட்டு, அதன் நீண்டகால பலனும் பாதிக்கப்படும்.