நேர்த்தியான உடல் வாகிற்கும் , கம்பீரமான தோற்றத்திற்கும் இன்றியமையாதது முதுகெலும்பு.
நீண்ட நேரம் அமர்ந்து பணிபுரிபவர்கள், முதுகு வலி, முதுகெலும்பு சார்ந்த பிரச்சனைகளை எதிர்க்கொள்கின்றனர்.
உடல் மூட்டுகளுக்கான சிறந்த மருந்தான கீரை மற்றும் முட்டைக்கோஸ், புரோக்கோலி போன்ற பச்சை இலைக் காய்கறிகள் உடலின் முதுகெலும்பை வலுப்படுத்தும்.
பாதாமில் கால்சியம் மற்றும் வைட்டமின்-ஈ நிறைந்துள்ளது. வாதுமை பருப்பில் அதிக ஒமேகா-3 அதிகம் உள்ளது. இவை முதுகெலும்பை வலுப்படுத்தும்.
கடல் உணவுகளில் குறிப்பாக சால்மன் மீன்களில் உள்ள மெலிந்த புரதம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் முதுகெலும்பை வலுப்படுத்தக்கூடியது.
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ள மீன் உணவு எலும்பு அடர்த்தியை அதிகரிக்கப்பதோடு திசுக்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.