இரும்பு சத்து குறைபாட்டினால், ரத்த சோகை உட்பட பல விதமான பிரச்சனைகள் ஏற்படலாம். ஆனால் அளவிற்கு மிஞ்சிய இரும்புச்சத்தும் மிக ஆபத்தான் விளைவுகளை ஏற்படுத்தும்
நமது உடலில், தேவைக்கும் மிக அதிகமான இரும்புச் சத்து சேமிக்கப்படும் போது, அது உடல் உறுப்புகளை அது சிறிது சிறிதாக சேதப்படுத்தத் தொடங்குகிறது.
இரும்பு சத்து உடலில் அளவிற்கு அதிகமாக தேங்கும் நிலை ஹீமோக்ரோமாடோசிஸ் (Hemochromatosis) எனப்படுகிறது.
ஹீமோக்ரோமாடோசிஸ் நிலையில், குடல் மூளை நரம்பு ஒருங்கிணைப்பில் பிரச்சனை, அல்சைமர் மற்றும் கால், கை வலிப்பு போன்ற நரம்பியக்கடத்தல் நோய்கள் ஏற்படலாம்.
இரும்புச்சத்து அதிகமாக உட்கொள்வதால் இரும்பு உப்புகள் திசுக்களில் படிந்து, கல்லீரல் பாதிப்பு, நீரிழிவு நோய் மற்றும் தோலின் பழுப்பு நிறமாற்றம் ஆகியவற்றிற்கு வழிவகுக்கும்.
அதிக இரும்புச்சத்து ஊசி போட்டுக்கொள்ளுதல் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளல் ஆகியவற்றால் இதய செயலிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது
அளவிற்கு அதிகமான இரும்பு சத்து காரணமாக பாலியல் உறவில் ஆர்வமின்மை, ஆண்மைக் குறைவு ஆகியவையும் ஏற்படலாம்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.