பொதுவாக, தேவைகளை பூர்த்தி செய்யவும், செலவுகளை ஈடுகட்டவும் தனிநபர் கடன்கள் வாங்கப்படுகின்றன.
தகுதியுள்ளவர்கள் வங்கிகளிடமிருந்து எளிதாக கடன் பெறலாம். இருப்பினும், தனிநபர் கடனை வாங்குவதற்கு முன் ஒன்றுக்கு இரு முறை யோசிக்க வேண்டும்.
வெவ்வேறு தேவைகளுக்காக நீங்கள் கடன் வாங்கலாம் என்றாலும், தவிர்க்க முடியாத செலவுகளுக்கு மட்டுமே கடன் வாங்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
வங்கிகளில் மட்டுமல்ல, டிஜிட்டல் என்.பி.எஃப்.சி (NBFC) என எங்கு கடன் வாங்கினாலும், அதற்கு நல்ல கிரெடிட் ஸ்கோர் இருப்பது முக்கியம்.
கடனை அங்கீகரிப்பதற்கான கட்டணம் எவ்வளவு என்பதை முதலில் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
தனிநபர் கடனை எடுக்கும்போது வட்டி விகிதம் மட்டுமல்லாமல் முன்கூட்டியே செலுத்தும் கட்டணங்கள் மற்றும் செலவுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
தனிப்பட்ட கடனுக்கு எவ்வளவு ஈ.எம்.ஐ செலுத்த வேண்டும் என்பதை சரிபார்க்கவும். சிறந்த வாடிக்கையாளர் சேவையை கொண்டிருக்கும் நிறுவனத்தில் கடன் வாங்குவது நல்லது.