ஆசனவாய் மற்றும் மலக்குடலில் உள்ள நரம்புகள் வீக்கமடைந்து புண்ணாவதால் மூல நோய் ஏற்படுகிறது.
மூல நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கார உணவுகள் அதிகம் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அதிக மிளகாய் அதிக வலி மற்றும் எரியும் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
உப்பு அதிகமுள்ள உணவுகளும் மூல நோயுள்ளவர்களுக்கு எதிரி தான். நீர்க்கோர்வையை உண்டாக்கி மலம் கழிக்கும்போது அதிக அழுத்தத்தைக் கொடுக்கலாம்.
பால் பொருட்களை அளவிற்கு அதிகமாக உட்கொள்வது மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்குக்கு வழிவகுக்கும். இவை இரண்டுமே மூல நோய் பிரச்சனையை அதிகரிக்கும்.
மைதாவில் நார்ச்சத்துக்கள் முற்றிலும் நீக்கப்பட்டு வெறும் பசையம் நிறைந்த கார்போஹைட்ரேட் மட்டும் இருக்கிறது. இது மலச்சிக்கலை ஏற்படுத்தும்.
மூல நோயுள்ளவர்கள் சிவப்பு இறைச்சியைத் தவிர்ப்பது நல்லது. ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும் என்பதோடு, அதனால் மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படலாம்.
கருமிளகு இயற்கையில் உடலுக்கு சூட்டை கொடுக்கும் மசாலா. மூல நோய் இருப்பவர்களுக்கு இதனால் மூல நோய் தீவிரமாகும்.
காபி, டீ போன்ற காஃபைன் கலந்த பானங்களும் மலத்தை இறுக்கமடையச் செய்து மலம் கழிக்கும் போது கடுமையான வலியை உண்டாக்கும்.
மூல நோயால் அவதிப்படுபவர்கள் இஞ்சியை உட்கொள்வதால், மலத்துடன் இரத்தம் வர வாய்ப்புள்ளது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.