உடல் எடையை குறைக்க டீடாக்ஸ் மிக பிரபலமான வழியாக உள்ளது. தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க உதவும் சில முக்கிய பழக்கங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதால், நச்சுகள் நீக்கப்பட்டு, செரிமானம் சீராகி, வளர்சிதை மாற்றம் மேம்படுகின்றது. இது உடல் எடை குறைய உதவுகிறது.
சர்க்கரை அளவு, கொழுப்பு ஆகியவை அதிகம் உள்ள பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். இவை உடலில் கூடுதல் கொழுப்பை அதிகரிக்கின்றது.
நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கள், பழங்கள், உலர் பழங்கள், முழு தானியங்கள் போன்ற அதிக நார்ச்சத்து உள்ள உணவுகள் எடை இழப்பு முயற்சியில் பெரிதும் உதவும்.
கிரீன் டீ, இலவங்கப்பட்டை டீ, தனியா, டீ, இஞ்சி டீ போன்ற மூலிகை தேநீர் வகைகள் அதிக கலோரிகளை எதிர்த்து, கொழுப்பை குறைத்து உடல் எடை குறைய உதவுகின்றன.
தூக்கமின்மை உடல் எடையை மிக வேகமாக அதிகரிக்கின்றது. ஆகையால் தினமும் கண்டிப்பாக 7-8 மணி நேரம் தூங்குவது அவசியமாகும்.
உடற்பயிற்சி, யோகா, நடைப்பயிற்சி போன்ற ஏதாவது ஒன்றை தினமும் செய்வது உடல் இயக்கத்தை உறுதி செய்து, எடை வேகமாக குறைய உதவுகின்றது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.