மலச்சிக்கலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் அதுதான் பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணமாக அமைகிறது.
மலத்தை இளக்கும் ஆற்றல் கொண்ட ஆப்பிள் ஜூஸ், செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலை தீர்க்கிறது.
கடும் கோடை காலத்திற்கு ஏற்ற ஜூஸ் ஆன வெள்ளரி ஜூஸ், மலச்சிக்கலை தீர்க்கும் அருமருந்து.
காலையில் வெறும் வயிற்றில், வெதுவெதுப்பான நீரில் கலந்த எலுமிச்சை ஜூஸ் பருகுவது மலச்சிக்கலை ஒழிக்க உதவும்.
நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு ஜூஸ், மலச்சிக்கலை போக்கும் திறன் பெற்றது.
உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும் தர்பூசணி ஜூஸ், மலச்சிக்கலை ஒழிக்கட்டும் உதவும்.
வைட்டமின் சி மற்றும் நீர் சத்துக்கள் நிறைந்த அன்னாசி ஜூஸ், மலமிளக்கியாக செயல்பட்டு மலச்சிக்கலை ஒழித்து கட்டுகிறது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.